- முற்றிலும் குளுமை அரங்கில் (A/C) நடைபெறுகிறது
- புத்தக அரங்கின் அருகிலேயே வாகனம் நிறுத்துவதற்கு வசதி (Car parking )
- கடன் அட்டையைப் (Credit Card)பயன்படுத்தும் வசதி
உலகப் புத்தக நாளை கொண்டாடுவதன் மூலம், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், “சென்னை புத்தகச் சங்கமம்” எனும் பெயரில் மாபெரும் புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு "சென்னை புத்தகச் சங்கமம்" 2016 ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி முடிய 3 நாட்கள் சென்னை - பெரியார் திடலில் நடைபெறுகிறது. 22ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடக்க விழாவும் அதனைத் தொடர்ந்து இரவு 9 மணி வரையிலும் நடைபெறுகிறது. அடுத்த இரு நாட்களும் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரையிலும் நடைபெறும்.
அனைத்து நூல்களும் 50% விழுக்காடு கழிவில் விற்பனை
கடந்த ஆண்டு இறுதியில் சென்னை மாநகர் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டதையொட்டி, பாதிப்புக்குள்ளான பதிப்பாளர்களுக்கும், வாசகர்களுக்கும் உதவிடும் வகையில் இந்த ஆண்டு முற்றிலும் புதுமையான முறையில் முதல் முறையாக அனைத்து நூல்களும் 50% கழிவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த விற்பனை அரங்கத்தில் இலக்கியம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளாதாரம், பகுத்தறிவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்த ஆயிரக்கணக்கான தலைப்புகளில் முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்கள் ஒரே இடத்தில் 50% கழிவு விலையில் கிடைக்கும்.
துவக்க விழா
இந்த மாபெரும் புத்தகக் காட்சியை ஏப்ரல்-22 அன்று காலை 10 மணியளவில் வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் அவர்களின் தலைமையில் தென்னிந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் மாண்புமிகு செர்கே கோட்டவ் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார்கள்.
‘புத்தகர் விருது’ வழங்கும் விழா
புத்தகங்களைப் பாதுகாப்பதிலும், வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே கொண்டு செல்வதிலும் உந்து சக்தியாக இருக்கும் பெருமக்களைப் பாராட்டி, 2016ஆம் ஆண்டிற்கான ‘புத்தகர் விருது’ வழங்கும் விழா 24.4.2016 அன்று மாலை நடைபெறுகிறது.
சிறுவர்-சிறுமியர்களுக்கான போட்டிகள் - பரிசுகள்
மூன்று நாட்களும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறுவர்களுக்காக ஓவியம், கலைப் பொருட்கள் உருவாக்குதல், கதை சொல்லுதல் மற்றும் அடிப்படை அறிவியல் கற்றுக் கொள்ளல் முதலிய பிரிவுகளில் குழந்தைகளுக்கான பயிற்சிகளும் போட்டிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பங்கேற்று வெற்றி பெறும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசுகளும் உண்டு. இதில் 5 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர் சிறுமியர் பங்கேற்கலாம்.( முன்பதிவு செய்ய : 95001 30417)
புத்தகக் கொடை விழா
இப்புத்தகச் சங்கமத்தில் புத்தக வங்கி ஏற்படுத்தி, வாசகர்கள் ஏற்கெனவே வாங்கிப் படித்த புத்தகங்களை அடுத்த தலைமுறைக்குத் தந்து உதவும் பண்பை வளர்க்கும் நோக்குடன் சேகரித்து, அவற்றை பல்வேறு சிற்றூர்களில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இவ்வாண்டும் புத்தக வங்கி திட்டத்திற்கான அரங்கம் அமைக்கப்பட்டு, புத்தகங்களை கொடையளிப்பவர்களுக்கு'புத்தகக் கொடைஞர்' என்ற சான்றிதழ் வழங்கப்படும்.
உணவுத் திருவிழா
கோடை விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடும் இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக உணவுத் திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதுமுள்ள வட்டார சிறப்பு உணவுகளும், நொறுக்கு உணவுப் பண்டங்களும் கிடைக்கும் வகையில் சிறப்பான உணவு அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
பார்வையாளர்களுக்கு சுத்தமான குடிநீர் தாராளமாகக் கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரமான கழிவறை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகங்களை கடன் அட்டையைப் (ஊசநனவை ஊயசன) பயன்படுத்தி வாங்கவும், ஐஒபி வங்கியின் நடமாடும் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதலுதவி சிகிச்சை மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரமும் நடைபெற உள்ளது.
நுழைவுக் கட்டணம் இல்லை
புத்தகக் காட்சிக்கு வரும் அனைவருக்கும் இந்த ஆண்டு நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம். அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்! புத்தகத்தை அள்ளுங்கள்! அறிவைக் கொள்ளுங்கள்! முற்றிலும் புதுமை அள்ளுங்கள்!!!